அர்ஜுன் தாஸின் கான் சிட்டி! புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!
கான் சிட்டி படத்தின் புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம்...
நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் புதிய கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள புதிய படம் “கான் சிட்டி”. நடிகர்கள் அனா பென், வடிவுக்கரசி, யோகி பாபு ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“பவர் ஹவுஸ்” நிறுவனம் தயாரிப்பில் புதுமையான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தம்பி ராமையா, பொன்வண்ணன், மதன், ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி ஆகியோரின் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கான் சிட்டி திரைப்படத்தில் நடித்துள்ள பிரபல நடிகர்கள் ராதாரவி, ஷாஜி சென், தீபா ராமானுஜம் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெள்ளிக்கிழமை (ஏப். 2) அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில், நடிகர்கள் ராதா ரவி - அப்துல் ரசாக், ஷாஜி சென் - எம்.எல்.ஏ. செந்தில் மற்றும் தீபா ராமானுஜம் - சுதா ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
New character introduction posters have been released for the film "con City," starring actor Arjun Das.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.