FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பாராமதி இடைத்தேர்தல்: ஏப்ரல் 6இல் சுநேத்ரா பவார் வேட்பு மனு தாக்கல்!

பாராமதி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி துணை முதல்வர் சுநேத்ரா பவார் ஏப்ரல் 6ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

Updated On : 3 ஏப்ரல் 2026, 6:45 pm IST
மகாராஷ்டிர துணை முதல்வர் சுநேத்ரா பவார்
பகிர்:

பாராமதி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி துணை முதல்வர் சுநேத்ரா பவார் ஏப்ரல் 6ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில் அண்மையில் நிகழ்ந்த விமான விபத்தில் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா் பலியானார். அஜீத் பவாரின் மறைவைத் தொடா்ந்து, அவா் வகித்து வந்த துணை முதல்வா் பதவியை அவரது மனைவியான சுநேத்ரா பவார் ஏற்றாா்.

பிறகு தான் வகித்துவந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை அவர் ராஜிநாமா செய்தாா். இதனிடையே அஜீத் பவார் மற்றும் பாஜக எம்எல்ஏ சிவாஜி கார்டிலே ஆகியோரின் மறைவால் காலியான, புணேவின் பாராமதி மற்றும் அகிலயநகரின் ரஹுரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

இந்த இடைத்தேர்தலில் துணை முதல்வர் சுநேத்ரா பவார் பாராமதி தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்காக ஏப்ரல் 6ஆம் தேதி தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்வார் என்று கட்சி வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. பாராமதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

வேட்புமனு தாக்கல் நிகழ்வின்போது, ​​முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரும் உடனிருப்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 2019 பேரவைத் தேர்தலில், அஜீத் பவார் பாராமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments