செய்திகள்

பிரபல தனியார் தொலைக்காட்சியிலிருந்து ஏன் விலகினார் நடிகை தேவதர்ஷினி?

சின்ன திரை மட்டுமல்லாமல் சினிமாவிலும் காமெடி நடிப்பில் அசத்துபவர் தேவதர்ஷினி. நடிகர் சேத்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து

சினேகா

சின்ன திரை மட்டுமல்லாமல் சினிமாவிலும் காமெடி நடிப்பில் அசத்துபவர் தேவதர்ஷினி. நடிகர் சேத்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து பல ஆண்டுகளாக சன் டிவி தொடர்களில் நடித்தும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வரும் தேவதர்ஷினி தற்போது ‘சண்டே கலாட்டா’ என்று ஒரு நிகழ்ச்சியில் 300 எபிசொட்களை தாண்டிவிட்டார். 

நடிப்பு, குரல், தோற்றம், உடல்மொழி என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்பவர் தேவதர்ஷினி. காஞ்சனா முதல் பாகத்தில் கோவை சரளாவுடன் அவரது காமெடி அட்ராஸடியை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. காஞ்சனா இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கவில்லை ஆனால் மூன்றாவது பாகத்தில் உற்சாகமாக நடித்துள்ளார். முந்தையை பாகங்களை விட இந்த மூன்று முற்றிலும் வேறு விதமான அனுபவத்தை தரும் என்று கூறுகிறார் தேவதர்ஷினி.

சமீபத்தில் ‘சண்டே கலாட்டா’ நிகழ்ச்சியிலிருந்து தேவதர்ஷினி விலகிவிட்டார்.  என்ன காரணம் என்று கேட்டபோது அதற்கு அவர், காரணம் எதுவும் பெரிதாக இல்லை. எனக்கு ஒரு ப்ரேக் தேவைப்பட்டது. சன் டிவி என் குடும்ப சேனல் தான், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இணைந்து கொள்ளலாம் என்று கூறினார்.

காஞ்சனா 3 படத்தில் நடித்து முடித்த தேவதர்ஷினி தற்போது ஜீ தமிழ் சேனலில் `காமெடி கில்லாடிஸ்' என்ற நிகழ்ச்சியின் நடுவறாக பங்கேற்று வருகிறார். கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார். சினிமாவிற்கு அதிகளவு கால்ஷீட் தருவதால், சின்னத் திரைக்கு தற்காலிக குட் பை சொல்லியிருக்கிறார் தேவதர்ஷினி.

என்னதான் பெரிய திரையில் தோன்றினாலும் தினமும் சின்னத் திரையில் தோன்றி ரசிகர்களிடம் உரையாடுவது போலாகாது என்று தேவதர்ஷினி நம்புவதால் நிச்சயம் அவரது கம் பேக் விரைவில் இருக்கும் என்கிறது சேனல் வட்டாரம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT