முகப்பு
செய்திகள்

மொழி படத்துக்குப் பிறகு ஹிந்திப் பட ரீமேக்கில் இணையும் ஜோதிகா - ராதா மோகன்!

 தமிழ்ப்பெண் என்கிற முறையில் துமாரி சுலு தமிழில் தயாராவது மகிழ்ச்சியளிப்பதாக வித்யா பாலனும் கூறியுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:21 PM
பகிர்:

வித்யா பாலன் நடித்த துமாரி சுலு என்கிற ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் மொழி பட வெற்றிக்கூட்டணியான ஜோதிகா - ராதா மோகன் இணைகிறார்கள். 

தனஞ்ஜெயனின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் வானொலி தொகுப்பாளராக ஜோதிகா நடிக்கவுள்ளார். 

வித்யா பாலன் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது துமாரி சுலு. அதில் நான் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று கூறியுள்ளார் ஜோதிகா.  தமிழ்ப்பெண் என்கிற முறையில் துமாரி சுலு தமிழில் தயாராவது மகிழ்ச்சியளிப்பதாக வித்யா பாலனும் கூறியுள்ளார். 

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான துமாரி சுலு, ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ. 50 கோடி வசூலித்ததாக படச் செய்திக்குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.