செய்திகள்

தந்தை, மகன் முதன்முறையாக இணையும் 'மிஸ்டர் சந்திரமௌலி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் ஆகியோர் முதன்முறையாக இணையும் 'மிஸ்டர் சந்திரமௌலி' ஃபர்ஸ்ட் லுக் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

Raghavendran

கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் ஆகியோர் முதன்முறையாக 'மிஸ்டர் சந்திரமௌலி' என்ற புதிய படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய 'திரு' இப்படத்தை இயக்கி வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் நடித்து 1986-ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மௌனராகம். அதில் வரும் ஒரு காட்சியில் தனது காதலியான ரேவதியின் தந்தையை 'மிஸ்டர் சந்திரமௌலி' என்று கார்த்திக் அழைப்பது மிகவும் பிரபலமானதாகும்.

இத்திரைப்படத்தில் அப்பா, மகனாகவே இவர்கள் தோன்றவிருக்கிறார்கள். கிரியேட்டிவ் என்டர்டெயினர் பட நிறுவனம் சார்பில் ஜி. தனஞ்செயன் இப்படத்தை தயாரிக்கிறார்.  நவம்பர் மாதம் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இதில், நடிகைகளாக ரஜீனா கஸன்ட்ரா, வரலட்சுமி, காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 13-ந் தேதி வெளியிடப்பட்டது. இதை இப்படத்தின் இயக்குநர் திரு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையம் அருகே மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

பிகாரில் கூறியதை பிரதமர் மோடி தமிழகத்தில் பேசுவாரா? முதல்வர் ஸ்டாலின்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

“தன்னையும் ஏமாற்றி பிறரையும் ஏமாற்றக்கூடாது!” செங்கோட்டையன் | Coimbatore | ADMK

SCROLL FOR NEXT