முகப்பு
செய்திகள்

நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?

விஜய் படம் என்றாலே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிடும். கடந்த ஆண்டு வெளிவந்த

Updated On : 19 ஜனவரி, 2018 at 11:25 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:31 PM

விஜய் படம் என்றாலே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிடும். கடந்த ஆண்டு வெளிவந்த மெர்சல் விஜய் கிராஃபில் முக்கியமான படமாகிவிட்டது. ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியைத் தொடர்ந்து அட்லி-விஜய் கூட்டணி வெற்றி பெற்றதும் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.

இந்நிலையில் அடுத்தடுத்த படத் தேர்வில் கவனமாக இருக்கிறார் விஜய். தற்போது ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து தளபதி-62 படத்தில் நடிக்கிறார், இந்நிலையில் விஜய் படத்தை அடுத்து இயக்குபவர் அட்லியாக இருக்கும் என்று அனுமானம் இருந்தது. ஆனால் தற்போது தளபதி-63 படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கவிருப்பதாக கோடம்பாக்கத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை.

தளபதி ரசிகர்களும் இந்த புதிய கூட்டணியை மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாராகிவிட்டனர். தளபதி-63 என்ற ஹாஷ்டேக் ஒன்றினை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியும் வருகின்றனர். சினிமாவை கொண்டாடுவதும், நடிகர்களின் அடுத்த படங்களைப் பற்றிய விபரங்களை பகிர்ந்து வருவதிலும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய ரசிகர்கள் இருக்கும் வரை  கமர்ஷியல் சினிமா வெற்றிக்கரமாக இயங்கிவரும் என்பது கண்கூடான உண்மை.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.