பாலா இயக்கும் வர்மா பட கதாநாயகி இவர் தான்! (படங்கள்)
வங்காள மொழியில் ஒரு படத்தில் நடித்துள்ள மேகா, தற்போது தமிழ் திரையுலகுக்கு வர்மா படம் மூலமாக...
பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.
இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. வர்மா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குநர் பாலா இயக்கி வருகிறார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement
வங்காள மொழியில் ஒரு படத்தில் நடித்துள்ள மேகா செளத்ரி, தற்போது தமிழ் திரையுலகுக்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார். இவர், கதக் நடனத்தை முறையே கற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.