செய்திகள்

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் பணத்தை முறைகேடு செய்ததாக விசு மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்தார் பாக்யராஜ்!

பிரபல இயக்குநரும் நடிகருமான விசு மீது இயக்குநர் பாக்யராஜ் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்...

எழில்

பிரபல இயக்குநரும் நடிகருமான விசு மீது இயக்குநர் பாக்யராஜ் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தென்னிந்தியத் திரைப்பட  எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக கே. பாக்யராஜ் உள்ளார். இந்நிலையில் இயக்குநர் விசு, கவிஞர் பிறைசூடன் ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையரிடம் பாக்யராஜ் புகார் அளித்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாக்யராஜ் கூறியதாவது:

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்துள்ளோம். சங்கத்தின் கணக்கு விவரங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முன்னாள்  செயலாளர்  பிறைசூடன் தன் வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டார்.  சங்கத்தின் முன்னாள் தலைவர் விசு, பிறைசூடன், மதுமிதா போன்றோர் பொதுக்குழுவின் ஒப்புதல் இன்றி அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி சங்கத்தின் பணம் ரூ. 37 லட்சத்தை மோசடியாக அறக்கட்டளைக்கு மாற்றியுள்ளார்கள். அதில் விசு, பிறைசூடன் போன்றோர் நிர்வாகிகளாக உள்ளார்கள். அறக்கட்டளை சார்பாக நலிந்த எழுத்தாளர்களுக்குக் கல்வித்தொகை, மருத்துவ உதவி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. நாங்கள் பொறுப்புக்கு வந்தவுடன் அறக்கட்டளையின் நிலைமை குறித்து விவாதிக்க முன்னாள் உறுப்பினர்களை அழைத்தோம். ஆனால் இதற்கு விசு, பிறைசூடன் போன்றோர் வர மறுத்துவிட்டார்கள். சங்கத்தின் பணம் அனைத்தும் அறக்கட்டளையின் பெயரில் உள்ளது. இதற்குப் பதிலளித்த பிறைசூடன், சங்கம் வேறு அறக்கட்டளை வேறு எனப் பதிலளித்தார்.  எனவே சங்கப் பணம் ரூ. 37 லட்சத்தை மீட்டுத் தரும்படி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT