முகப்பு
செய்திகள்

விரைவில் ஆரம்பமாகவுள்ள நாடோடிகள் 3: சமுத்திரக்கனி அறிவிப்பு!

நாடோடிகள் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக இயக்குநர் சமுத்திரக்கனி அறிவித்துள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:15 PM
பகிர்:

2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் "நாடோடிகள்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன. இதையடுத்து நாடோடிகள் 2 படம் தொடங்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

முதல் பாகத்தில் இருந்த சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் இணைந்துள்ளது. இசையமைப்பாளர் - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் - ஏகாம்பரம், கலை இயக்குநர் - ஜாக்கி, படத்தொகுப்பு - ஏ.எல்.ரமேஷ். 

இப்படத்தின் நாயகிகளாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ளார்கள். இந்நிலையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக இயக்குநர் சமுத்திரக்கனி அறிவித்துள்ளார்.

Advertisement

இதுமட்டுமல்லாமல், நாடோடிகள் படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments