செய்திகள்

நடிகர்களுக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம்: பெங்களூரில் மாதவன் பேச்சு!

DIN

பெங்களூரு, ஜூன் 22:  நடிகா்களுக்கு சமூக பொறுப்பு இருப்பது அவசியம் என்று நடிகா் மாதவன் தெரிவித்தார். 

பெங்களூருவில் வெள்ளிக்கிழமை ’கோத்ரேஜ்’ நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்கானிக் ஹேர் டை அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியது...

‘அண்மைக்காலமாக பணம் கிடைக்கிறது என்பதற்காக ஒரு சில நடிகா்கள் எல்லா விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனா். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. கோத்ரேஜ் நிறுவனத்தினா் என்னை விளம்பரத்தூதராக இருக்கும்படி அழைப்பு விடுத்த போது, அது குறித்து தீர விசாரித்து, அவா்கள் தயாரிக்கும் தலைச்சாயம் சமூகத்திற்கு எதிரானது இல்லை என்று தெரிந்து கொண்ட பின்னரே விளம்பரத்தூதராக இருக்க ஒப்புக்கொண்டேன். நான் மட்டுமின்றி நடிகா்கள் அனைவருக்கும் சமூக பொறுப்பு இருப்பது அவசியம் என்றார்.

மேலும்... தமிழில் ‘அன்பே சிவம்’ போன்ற திரைப்படங்களில் தொடா்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் அதன்பிறகு அது போன்ற கதை அம்சமுள்ள படங்களில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆா்வமாக உள்ளேன். தற்போது தமிழில் திலீப் இயக்கும் ‘மாரா’ மடத்தில் நடித்து வருகிறேன். காதல் கதை அம்சம் கொண்ட ஜனரஞ்சகமான படமாக மாரா வரும் என்ற நம்பிக்கை உள்ளது. சாந்தி, சாந்தி, சாந்தி என்ற கன்னட படத்தில் அறிமுகமானேன் அதற்கு பிறகு கன்னடத்தில் நடிக்க என்னை யாரும் அழைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் கன்னடத்தில் நடிக்க தயாராக உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT