செய்திகள்

பிளாஸ்டிக்குக்கு தடை கோருகிறார்களே, அதில் ஆணுறையும் அடங்குமா? நடிகை பூனம் பாண்டே!

பிளாஸ்டிக்குக்கு  தடை  கோருகிறார்களே, அதில் ஆணுறையும் அடங்குமா? என்ற அவருடைய ஆகச்சிறந்த கேள்வி தான்.

சரோஜினி

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தன் நடிப்புத் திறனால் லைம்லைட்டில் இருக்கிறாரோ இல்லையோ, இணையத்தில் தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் ஏடாகூடமாகக் கேள்வி கேட்பதன் மூலமும், தனது அரைகுறை ஆடைகளுடனான புகைப்படங்கள் & வீடியோக்கள் மூலமாகவும் எப்போதும் லைம்லைட்டில் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்வதில் சமர்த்துப் பெண். 

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரும் பிரச்சாரம் தற்போது வலுத்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகளும் பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வதற்குண்டான பல முயற்சிகளைக் கையிலெடுத்துள்ளது. அதற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் பொதுமக்களிடையே பரவலாக வைரலாகி வரும் நிலையில் நடிகை பூனம் மட்டும் சும்மா இருப்பாரா? அதற்காக அவர் உடனடியாக ‘Ban Plastic' அம்பாஸிடராக மாறி விட்டார் என்று அர்த்தமில்லை. பிளாஸ்டிக் பொருட்களுக்கெதிரான தடையை மக்களிடையே பரவலாகக் கொண்டு செல்ல அவர் ஒரு சிறு துரும்பைக்கூடத் தூக்கிப் போடப் போவதில்லை. இந்த விஷயத்தில் பூனம் பாண்டேவின் பெயர் வைரலாக உச்சரிக்கப்பட ஒரே காரணம்.

பிளாஸ்டிக்குக்கு  தடை  கோருகிறார்களே, அதில் ஆணுறையும் அடங்குமா? என்ற அவருடைய ஆகச்சிறந்த கேள்வி தான்.

பூனம் கேட்ட கேள்விக்கு ஒருவர் சமர்த்தாகப் பதிலும் அளித்திருந்தார்...

எப்படி என்றால்?

இப்படித்தான்...

ஆணுறை, பிளாஸ்டிக்கில் தயாராவதில்லை, அது ரப்பரில் தயாரிக்கப்படுகிறது என. 

என்ன ஒரு அபார கேள்வி! அதற்கு எப்படிப்பட்டதொரு பொறுப்பான பதில். அடடா!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT