முகப்பு
தமிழ்நாடு

செங்கோட்டையன், ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு இபிஎஸ் துரோகம்: மு.க. ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தவர்களுக்கே துரோகமிழைக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

Updated On : 5 ஏப்ரல், 2026 at 5:59 AM
முதல்வர் ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி - சித்திரிப்பு
பகிர்:

எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தவர்களுக்கே துரோகமிழைக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விருதுநகரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி துரோமிழைக்காத தரப்பே இருக்காது. மூன்று வேளாண் சட்டத்தை அறிவித்து, உழவர்களுக்கு துரோகம்; பொள்ளாச்சியில் பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றி, பெண்களுக்கு துரோகம்; பாஜகவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு கொடுத்து, சிறுபான்மை சமூகத்துக்கு துரோகம்.

கட்சியில் உங்களை வளர்த்துவிட்ட செங்கோட்டையனுக்கு துரோகம்; பதவிகொடுத்த சசிகலா, தினகரனுக்கு துரோகம்; ஓ. பன்னீர்செல்வத்துக்கு துரோகம்.

Advertisement

உங்கள் ஆட்சியைக் காப்பாற்றிய முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலுக்கே சீட் கொடுக்காமல் துரோகம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்பட்ட பாஜகவை ஜெயலலிதா எதிர்த்தநிலையில், அதே பாஜகவுடன் கூட்டணி வைத்து, ஜெயலலிதாவுக்கும் துரோகம். துரோகத்துக்கு உருவம் கொடுத்தால், அது பழனிசாமிதான் என்று தெரிவித்தார்.

summary

ADMK Leader Edappadi Palaniswami Betrayed Sengottaiyan, O Panneerselvam, Sasikala, and Dhinakaran, says M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments