செய்திகள்

இயக்குநர் பாக்யராஜுக்குப் பிடித்த 'அந்த' 10 விஷயங்கள் என்ன?

சினேகா

திரைப்படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுபவர்களுக்கான சங்கமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. அண்மையில் இச்சங்கம் சார்பாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக இயக்குநர், நடிகர், கே. பாக்யராஜும், கெளரவ தலைவராக இயக்குநர் விக்ரமனும் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

இயக்குநர்கள் விரும்பும் ஒரு இயக்குநரான கே.பாக்கியராஜ் தனக்குப் பிடித்த பத்து விஷயங்களை பட்டியலிடுகிறார்.

1. அனைத்து மொழிகளிலும் ஆக்‌ஷன், த்ரில்லர் படங்கள் பார்ப்பது.

2. கதை விவாதம் செய்வது.

3. மீன் வறுவல் & குழம்பு.

4. படிப்பது (பலதரப்பட்ட புத்தகங்கள்).

5. பிறருக்கு உதவுதல்; இன்ப அதிர்ச்சி தருதல்.

6. பெண்களை ரசிப்பது. (எல்லா வயதினரையும்...)

7. வெளிமாநிலங்கள், நாடுகளில் உடைகள் போட்டுப் பார்த்து வாங்குவது.

8. அனைத்து நாட்டுப் பழமொழிகள் மற்றும் ஆன்றோர் பொன்மொழிகள்.

9. 20, 30 நாள்கள் இடைவெளிவிட்டு பொழுதுபோக்கில் ஈடுபடுவது.

10.என் திரைக்கதையின் குறைகளைச் சுட்டிக்காட்டி, நிறைவான நிவாரணம் சொல்வது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT