பிரபல மலையாள டி.வி தொகுப்பாளினி விபத்தில் மரணம்!
பிரபல மலையாள டி.வி தொகுப்பாளினியும், செய்தி வாசிப்பாளருமான சூர்யா வாசன் நேற்று கோட்டயத்தில் விபத்தில் மரணமடைந்தார்.
பிரபல மலையாள டி.வி தொகுப்பாளினியும், செய்தி வாசிப்பாளருமான சூர்யா வாசன் நேற்று கோட்டயத்தில் விபத்தில் மரணமடைந்தார். கோட்டயத்தில், சூர்யா தனது சகோதரர் அனந்தபத்மநாபனுடன் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக வேன் ஒன்றால் மோதப்பட்டு நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு விரைந்த போதும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
கேரள காவல்துறையினர் விபத்துக்குக் காரணமான வேன் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. மரணமடைந்த சூர்யாவுக்கு இன்னும் திருமணமாகியிருக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் அவரது தந்தை காலமாகியிருந்தார். மலையாள டி.வி சேனல் வட்டாரங்கள் மிகவும் பிரபலமான சூர்யாவாசனின் மறைவு அங்கிருக்கும் டி.வி பிரபலங்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சூர்யா வாசனின் மறைவுக்காகத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
Related Article
மனம் திறந்து பேசுவதில் அன்றும், இன்றும் குஷ்பூவை யாராலும் மிஞ்ச முடியாது!
'ஒரே வாரத்தில் நான்கு படங்கள் வெளியாவதால் இரண்டு படங்கள் பாதிக்கப்படும்'
மூன்று முறை மணிரத்னம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டு வருந்தும் நடிகை!
சீனாவில் ‘பாகுபலி 2’ எதிர்பார்த்த வசூலை அடையாதது ஏன்?
தேசிய விருதுகளால் பெருமிதம்: இயக்குநர் செழியன், பாடகி ஷாஷா திரிபாதி பேட்டி