செய்திகள்

நடிகர் விஷாலின் மணப்பெண் யார்?

அண்மையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த 'சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். 

ராக்கி

அண்மையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த 'சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். 

விஷால் நிகழ்ச்சியில் பேசுகையில், 'இரும்புத்திரை படத்தின் வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப்படம் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிராக எடுக்கப்பட்டது. எனக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. வாக்குச்சீட்டு முறையைத் தான் நான் அதிகம் நம்புகிறேன். நடிகர் சங்கம் கட்டடம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் முடிக்கப்பட்டுவிடும். அதற்கு அடுத்த முகூர்த்தத்தில் என் திருமணம் நடக்கும். மணப்பெண் யார் என்று வியக்கிறீர்களா. அவரைத் தான் நான் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறேனே’ என்று பொடி வைத்துப் பேசி முடித்தார் விஷால்.

விஷால் நடிகை வரலட்சுமியை நீண்ட காலமாக காதலித்து வருவதாக கோலிவுட்டில் பேச்சு இருந்தாலும் இதுகுறித்து இருவரும் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கவில்லை. 2019-ம் ஆண்டு விஷால் டும் டும் கொட்டும் வரை அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் தொடரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கயத்தில் குழந்தைகள் அறிவியல் மாநாடு

ஷேக் ஹசீனாவை நாடுகடத்தும் கோரிக்கை பரிசீலனை: வெளியுறவு அமைச்சகம் தகவல்

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

மாவட்டத்தில் 17 மாணவா்களுக்கு ரூ.1.41 கோடி வங்கிக் கடன்

சுதந்திரம் என்பது உரிமைகள் மட்டுமல்ல, கடமைகளும் இணைந்தது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT