செய்திகள்

ரகுவரன் குறித்து நடிகை ரோகிணி பகிர்ந்து கொண்ட உருக்கமான நினைவு!

ரகு உயிரோடிருக்கையில், அவரது திரைப்படங்களில், அவரது ஒவ்வொரு அசைவுமே ரசிகர்களால் பெரும் ஆராவாரத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு ரசிக்கப் பட்டமை குறித்து அவருக்கு பெரிதாக எதுவும் தெரியாது

சரோஜினி

நடிகர் ரகுவரன் இன்று நம்மோடு இல்லை. அவர் மறைந்து விட்டார். ஆனால், அவருக்கு மொழி கடந்தும் மிகத்தீவிரமான ரசிகர்கள் கணிசமாக இருப்பதை அவ்வப்போது சில பிரபலங்கள் அவரை சிலாகித்துப் பேசும் போது அறிய நேர்கிறது. இதைப் பற்றி அவரது மனைவியும், நடிகையுமான ரோகிணி என்ன சொல்கிறார் எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

ரகு உயிரோடிருக்கையில், அவரது திரைப்படங்களில், அவரது ஒவ்வொரு அசைவுமே ரசிகர்களால் பெரும் ஆராவாரத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு ரசிக்கப் பட்டமை குறித்து அவருக்கு பெரிதாக எதுவும் தெரியாது. ஒருவேளை ரசிகர்கள் தன்னை இத்தனை ஆராதிக்கிறார்கள் என்று அறிந்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ந்திருப்பார். ஆனால், அவருக்கு அப்போது அதெல்லாம் தெரியாது. நானும், அவரது நண்பர்களும் அவரிடம் அவரது நடிப்புத்திறனைப் பற்றி சிலாகித்துப் பேசுவோம் தான், ஆனால் அவருக்கு அது போதவில்லை. அவரது மரணத்திற்குப் பிறகு ரசிகர்கள் திரையில் ரகுவரனைக் கண்டதுமே ஆர்பரித்துக் கொண்டாடுவதைக் காணும் போது, இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே என்று சில நேரங்களில் மனம் கனத்துப் போகிறது. - நடிகையும், டப்பிங் கலை வல்லுனருமான ரோகிணி சமீபத்திய தனது யூ டியூப் நேர்காணலொன்றில் பகிர்ந்து கொண்ட தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT