முகப்பு
செய்திகள்

சூர்யாவின் மகன் பெயரை தனது அடுத்த படத்தின் டைட்டிலாக வைக்கிறாரா நடிகர் கார்த்தி?

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. 

Updated On : 30 மே, 2018 at 12:58 PM
பகிர்:

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி.
 
இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரித்துள்ளார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் போன்றோர் நடித்துள்ளார்கள். தெலுங்கிலும் வெளியாகும் இந்தப் படத்துக்கு சின்னபாபு என்று பெயரிடப்படுள்ளது. அர்த்தனா பினு, சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், சவுந்தரராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  

கடைக்குட்டி சிங்கத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய படம் ரஜத் இயக்கத்தில் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த படத்துக்கான டைட்டில் தேர்வு நடைபெறுகிறது. பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கார்த்தியின் 17-வது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார். `தேவ்' என்னும் பெயரை டைட்டிலாக வைக்கலாம் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவலை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. சென்னையில் சில பகுதிகளில் ஷூட்டிங் முடிந்த நிலையில் தற்போது மும்பை, ஹைதராபாத், இமயமலை மற்றும் ஐரோப்பாவில் இதன் ஷூட்டிங் நடைபெறுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.