முகப்பு
செய்திகள்

முதல்முறையாக ‘யு’ சான்றிதழ் வாங்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குநர்: ஆர்யா பாராட்டு!

இந்தப் படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து நடிகர் ஆர்யா ட்வீட் செய்ததாவது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:11 PM
பகிர்:

இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கிய ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய இரு படங்களுமே தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றது மட்டுமல்லாமல் கடும் விமரிசனங்களையும் எதிர்கொண்டன. 

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா, சயீஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் - கஜினிகாந்த். ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - பாலமுரளி பாலு.

இந்தப் படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து நடிகர் ஆர்யா ட்வீட் செய்ததாவது:

வாழ்த்துகள் சந்தோஷ் பி. ஜெயக்குமார். உங்களுடைய முதல் யூ சான்றிதழ் படம் இது. வீ ஆர் ரியலி பிரெளட் ஆஃப் ‘யு’ என்று கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.