முகப்பு
செய்திகள்

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இயக்குநர் காலமானார்!

தி லாஸ்ட் எம்ப்ரர் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற இத்தாலி இயக்குநர் பெர்னார்டோ பெர்டோலூச்சி காலமாகியுள்ளார். அவருக்கு வயது, 77.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

தி லாஸ்ட் எம்ப்ரர் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற இத்தாலி இயக்குநர் பெர்னார்டோ பெர்டோலூச்சி காலமாகியுள்ளார். அவருக்கு வயது, 77.

ரோம் நகரில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

1988-ல் தி லாஸ்ட் எம்ப்ரர் படம் 9 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு அனைத்தையும் வென்றது. சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருதுகளின் மூலம் பெர்னார்டோ அதிகப் புகழை அடைந்தார். 

Advertisement

1941-ல் பிறந்த பெர்னார்டோ தனது தந்தையைப் போல கவிஞர் ஆக விரும்பினார். ஆனால் திரைப்பட இயக்குநராகி, 1962-ல் அவருடைய முதல் படம் (The Grim Reaper) வெளிவந்தது. மார்லன் பிராண்டோ நடித்த லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் படம் மூலமாக சர்வதேசக் கவனம் அடைந்தார். 1972-ல் வெளியான இந்தப் படம் அவருடைய சொந்த நாடான இத்தாலியில் தடை செய்யப்பட்டு, 1987-ல்தான் அதன் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. தி ஷெல்டரிங் ஸ்கை, லிட்டில் புத்தா போன்ற படங்களையும் அவர் இயக்கியுள்ளார். 

பெர்னார்டோவின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments