பேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் வெளியீட்டை மீண்டும் உறுதி செய்தது விஸ்வாசம்
ரஜினி நடித்துள்ள பேட்ட படம் திடீரென பொங்கல் போட்டியில் களமிறங்கியதால், விஸ்வாசம் பொங்கல் சமயத்தில் வெளியாகுமா என்கிற...
அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கிவருகிறார்.
சிவா இயக்கிய வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விஸ்வாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித்.
Advertisement
ரஜினி நடித்துள்ள பேட்ட படம் திடீரென பொங்கல் போட்டியில் களமிறங்கியதால், விஸ்வாசம் பொங்கல் சமயத்தில் வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் பொங்கல் வெளியீடு என்பது மீண்டும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் சமயத்தில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.