முகப்பு
செய்திகள்

பரியேறும் பெருமாள் படக் கதாநாயகனைத் தொலைப்பேசியில் பாராட்டிய விஜய்!

ஒரு தொலைப்பேசி அழைப்பு, என் கற்பனைக்கெட்டாத கனவை நிறைவேற்றியுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

"அட்டகத்தி', "மெட்ராஸ்', "கபாலி' ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர், "பரியேறும் பெருமாள்' என்ற படத்தைத் தயாரித்துள்ளார். 

இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். 

திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது.  காதல், ஆக்ஷன் அடங்கிய ஜனரஞ்சகமான படமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் கதாநாயகனாகவும் ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இசை -  சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - ஸ்ரீதர். கலை - ராமு.

செப்டம்பர் 28 அன்று வெளியாகியுள்ள இப்படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்துவருகின்றன. திரையரங்குகள், காட்சிகளின் எண்ணிக்கைகளும் அதிகமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் கதிரைத் தொலைப்பேசியில் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் விஜய். எங்குப் பார்த்தாலும் படம் குறித்த பேச்சாக உள்ளது. வாழ்த்துகள் என்று பாராட்டியுள்ளார். இதுபற்றி கதிர் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

ஒரு தொலைப்பேசி அழைப்பு, என் கற்பனைக்கெட்டாத கனவை நிறைவேற்றியுள்ளது. பரியேறும் பெறுமாள் படத்துக்காக வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி விஜய் சார். உங்களுடைய வார்த்தைகள், ஒவ்வொரு விஜய் ரசிகரிடமிருந்தும் வாழ்த்துகளைப் பெற்றதைப் போல இருந்தது. நேர்மறை எண்ணங்களை உருவாக்கியது என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →