பொங்கலுக்கு வெளியாவது மீண்டும் உறுதி செய்யப்பட்டது: விஸ்வாசம் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
இதிலும் படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது...
அஜித் - சிவா மீண்டும் இணையும் படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கிவருகிறார்.
சிவா இயக்கிய வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விசுவாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித்.
Advertisement
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 23 அன்று அதிகாலை 3.40 மணிக்கு விஸ்வாசம் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியானது. இன்று காலை 10.30 மணிக்கு இரண்டாவது தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இதிலும் படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.