முகப்பு
செய்திகள்

நயன்தாரா விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் வைரல் விடியோ!

கோலிவுட்டில் காதல் ஜோடிகளான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தாங்கள் விளையாடிய `பேக் மேன் ஸ்மாஷ்’

Updated On : 23 செப்டம்பர், 2018 at 5:29 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:23 PM

கோலிவுட்டில் காதல் ஜோடிகளான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தாங்கள் விளையாடிய `பேக் மேன் ஸ்மாஷ்’ (Pac-Man Smash) விடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் தனது 34-வது பிறந்த தினத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் டூர் சென்றுள்ளார். அங்கு இருவரும் பேக் மேன் ஸ்மாஷ் கேம் விளையாடியுள்ளனர். இந்த வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 1050 பாயிண்டுகளை நயன்தாரா பெற்றுள்ளார். 700 பாயிண்டுகளை மட்டுமே பெற்ற விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் தோல்வி அடைந்துள்ளார். ஆனால் இந்த தோல்வி அவருக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதே. பிரியத்துக்குரியவருக்கு விட்டுக் கொடுத்தல், அல்லது தோற்றல் என்பது காதலில் சகஜமப்பா என்கின்றனர் நெட்டிசன்கள். ஞாயிற்றுக்கிழமை ட்ரெண்டிங்கில் இந்த விடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

காணொலி:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.