செய்திகள்

சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம்: வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு 

சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது

DIN

சென்னை: சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது

சுந்தர்.சி இயக்கத்தில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்குப் பிறகு சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் முத்தையா இயக்கத்தில் 'தேவராட்டம்' படத்தில் கவுதம் கார்த்திக் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஸ்டூடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

எஸ்.டி.ஆருடன் முதல்  தடவையாக சேர்வதில் மிகுந்த ஆர்வத்துடனுள்ளோம். அதிக பெருட்செலவில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக்கும் நடிக்கிறார். படத்தை இயக்குனர் நார்தன் இயக்குகிறார். மதன் கார்க்கி பணியாற்றுகிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இயக்குனர் நார்தன்  கன்னடத்தில் `மஃப்டி' என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர என்பது கவனிக்கத்தக்கது.

அதேபோல் இது நடிகர் சிம்புவின் 45-வது படமாக அமையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT