முகப்பு
செய்திகள்

சூர்யாவை இயக்கும் சிவா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜூன் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் வருடத்தின் ஆரம்பத்தில்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:43 AM
பகிர்:

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்கிற படத்தில் நடித்துவருகிறார் அஜித். அடுத்ததாக, போனி கபூர் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இயக்குநர் சிவாவின் அடுத்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ஜிகே, காப்பான் என இரு படங்களில் தற்போது நடித்துமுடித்துள்ளார் சூர்யா.  இறுதிச்சுற்று சுதா இயக்கும் சூரரைப் போற்று என்கிற படத்தில் அடுத்ததாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவா படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது சூர்யாவின் 39-வது படம். 

ஜூன் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் வருடத்தின் ஆரம்பத்தில் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.