செய்திகள்

புதனன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது: சிறப்பு அதிகாரி சேகர் அறிவிப்பு 

புதனன்று நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  சிறப்பு அதிகாரி சேகர் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: புதனன்று நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  சிறப்பு அதிகாரி சேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த நியமத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தார்.

இந்நிலையில் புதனன்று நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  சிறப்பு அதிகாரி சேகர் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகிகளால் புதனன்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்ட பொதுக்குழு கூட்டமானது நடைபெற வாய்ப்பில்லை என்பது தொடர்பான  அறிவிப்பு தயாரிப்பாளர் சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

SCROLL FOR NEXT