செய்திகள்

வினோத் இயக்கவுள்ள அஜித் 60 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்காதது ஏன்?

இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதை ரஹ்மான் மறுத்துள்ளார்...

எழில்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படமான நேர்கொண்ட பார்வை-யை இயக்கியுள்ளார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் இது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 8 அன்று இப்படம் வெளிவரவுள்ளது.

அஜித் - வினோத் - போனி கபூர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. அஜித் 60 என்று தற்போதைக்கு அழைக்கப்படும் இப்படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும் என்று போனி கபூர் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதை ரஹ்மான் மறுத்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஏ.ஆர். ரஹ்மான் அளித்த பேட்டியில், அஜித் 60 படத்துக்கு நான் இசையமைக்கவில்லை. ஏற்கெனவே நான் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல், அமைப்பு, சமூகத்தை கட்டமைக்கும் கருவி இலக்கியம்: அமைச்சர் கோவி. செழியன்

தமிழகத்தில் என்றுமே கூட்டணி ஆட்சி இல்லை: அமைச்சர் ஐ. பெரியசாமி

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல்: பாஜவினர் பல்வேறு இடங்களில் போராட்டம்

பாஜக ஆட்சியில் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்: அமித் ஷா

தமிழ் அடையாளத்திற்கு முன்பு வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி

SCROLL FOR NEXT