முகப்பு
செய்திகள்

ரஜினி, கமல், அமீர்கான், மம்முட்டி மற்றும் பலர் இடம்பெறும் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு ' புதிய  ட்ரைலர்  

ரஜினி, கமல், அமீர்கான், மம்முட்டி மற்றும் பல பிரபல நடிகர்களின் பங்களிப்பு இடம்பெற்றுள்ள, நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு - சைஸ் 7 ' திரைப்படத்தின் புதிய  ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:49 AM
பகிர்:

சென்னை: ரஜினி, கமல், அமீர்கான், மம்முட்டி மற்றும் பல பிரபல நடிகர்களின் பங்களிப்பு இடம்பெற்றுள்ள, நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு - சைஸ் 7 ' திரைப்படத்தின் புதிய  ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஏறக்குறைய இரண்டு வருட இடைவேளைக்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. பார்த்திபன் மட்டுமே இப்படத்தில் ஒரே கதாபாத்திரமாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி பணியாற்றியுள்ளார்.

இந்தப் படத்தின் டீசரை இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த மே மாதம் 13-ஆம் தேதியன்று  ட்விட்டரில் வெளியிட்டார்.

பின்னர் படத்தின் முதல் ட்ரைலரை நடிகர் கார்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மே  27 ஆம் தேதியன்று வெளியிட்டார்

இந்நிலையில் ரஜினி, கமல், அமீர்கான், மம்முட்டி மற்றும் பல பிரபல நடிகர்களின் பங்களிப்பு இடம்பெற்றுள்ள , நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு - சைஸ் 7 ' திரைப்படத்தின் புதிய  ட்ரைலர் வியாழனன்று வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →