செய்திகள்

கேப்டன் மகனுக்கு திருமணம்! எளிமையாக நடந்த திடீர் நிச்சயதார்த்தம்!

சினேகா

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து சாதித்த தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் விஜய்காந்த். கேப்டன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய்காந்தின் தே.மு.தி.க கட்சி எதிர்க்கட்சியாகும் அளவுக்கு உயர்ந்தது சரித்திரம். கடந்த சில அண்டுகளாக உடல்நலக் குறைவால் விஜய்காந்த் பாதிக்கப்பட்டுள்ளார்.

விஜய்காந்த் பிரேமலதா தம்பதியருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இளையமகன் சண்முக பாண்டியன்.   சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சகாப்தம், மதுர வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மூத்த மகனான விஜய பிரபாகரன் அரசியல் ஆர்வம் உடையவர். கட்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் சென்னை ஸ்மாஷர்ஸ் பேட்மிண்டன் அணியின் உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அண்மையில் விஜய பிரபாகரனின் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பிரமுகர் இளங்கோ என்பவரின் மகளுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நேற்று (டிசம்பர் 6) நடந்தள்ளது.  

நிச்சயதார்த்தம் குறித்தும், பெண் வீட்டாரைப் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை விஜய்காந்த் குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை. ஆனால் விஜய் பிரபாகரனுக்கு கல்லூரி காலத்திலிருந்தே ஒரு காதலி இருந்ததும், அவருக்காகத்தான் உடல் எடை குறைத்ததாகவும் ஒரு பேட்டியில் முன்பு கூறியிருந்தார்.

எட்டு வருடக் காதலை திருமணத்தில் தொடர பெற்றோரின் சம்மதத்தை எதிர்நோக்கியிருந்த நிலையில் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் சம்மதித்ததால், இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் திடீரென்று முடிவு செய்யப்பட்டு எளிமையாக இரு குடும்ப வீட்டினர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாக அமைந்தது. ஆனாலும் நிச்சயதார்த்தக் கோலத்தில் விஜய பிரபாகரன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விட்டது.

இந்த நிச்சயதார்த்த விழாவில் மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தை மாதத்தில் பிரபல அரசியல் தலைவர்கள் முன்னிலையில்  திருமணம் நடைபெறும் என்கிறது விஜய்காந்த் குடும்பத்தினரின் நெருங்கிய வட்டாரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT