Miss World 2019 Jamaica Toni Ann Singh 
செய்திகள்

2019 உலக அழகியாக டோனி ஆன் சிங் தேர்வு!

உலக அழகியாக ஜமைக்காவைச் சேர்ந்த டோனி ஆன் சிங் (23) தேர்வு செய்யப்பட்டார்

DIN


உலக அழகி 2019 போட்டியில் உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

2019 ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த டோனி-ஆன் சிங் வென்றார்,  23-வயதாகும் இவர் அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் உளவியல் மாணவி ஆவார். பிரான்சின் ஓபிலி மெசினோ இரண்டாவது இடத்தையும், இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தையும், பிடித்துள்ளனர்.

மிஸ் வேர்ல்ட் வலைதளம் இவரைப் பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், டோனி-ஆன் சிங் டாக்டராக வேண்டும் என்ற விருப்பமுடையவர்.   புதிய உலக அழகியான அவர், தனது ஓய்வு நேரத்தில் பாடுவது, சமைப்பது, போன்றவற்றை விரும்பிச் செய்வாராம். உலக மக்களுக்கு தொண்டாற்றுவது தனக்கு மிகவும் விருப்பமான சேவை என்றும் கூறியிருக்கிறார். அம்மாதான் தன் கனவுகளை மதித்து, அதை கண்டு அடைவதற்கான உற்சாகத்தைத் தந்தவர் என்று ஒரு பேட்டியில் மனம்திறந்து கூறியிருக்கிறா டோனி ஆன் சிங்.

பிரியங்கா சோப்ரா 2000-ம் ஆண்டில் இப்பட்டத்தை கைப்பற்றியவர். அதன்பின் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் மனுஷி சில்லர் 2017-ம் ஆண்டில் இந்தியா சார்பில் உலக அழகிப் பட்டத்தை வென்றவர். தற்போது இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தைப்  பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.

உலக அழகி போட்டியை வென்ற நான்காவது ஜமைக்கா பெண் டோனி ஆன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT