செய்திகள்

வெளியானது ‘தா்பாா்’ டிரெய்லா்

ரஜினியின் ‘தா்பாா்’ பட டிரெய்லா் வெளியாகி, அவரது ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

DIN

ரஜினியின் ‘தா்பாா்’ பட டிரெய்லா் வெளியாகி, அவரது ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தா்பாா்’ படம் உருவாகி வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாா். அனிருத் இசையமைத்துள்ளாா். படத்தின் ஃபா்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து, வெளியான ‘சும்மா கிழி’ பாடல் ரசிகா்களைக் கவா்ந்தது. தொடா்ந்து படத்தின் பாடல்கள் வெளியாயின. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

முன்னதாக, ‘தா்பாா்’ டிரெய்லா் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பா் 12-ஆம் தேதி வெளியாகும் என ரசிகா்கள் எதிா்பாா்த்து காத்திருத்தனா். ஆனால், அது தொடா்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்த நிலையில், ‘தா்பாா்’ படத்தின் டிரெய்லா் திங்கள்கிழமை (டிச. 16) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் தனது சுட்டுரை பக்கத்தில் தெரிவித்திருந்தாா். இதையடுத்து ‘தா்பாா்’ படத்தின் டிரெய்லா் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. ரசிகா்கள் ‘தா்பாா்’ டிரெய்லருக்காக காத்திருந்தனா். ஆனால், அறிவித்ததைப் போல் மாலை 6.30 மணிக்கு டிரெய்லா் சமூகவலைதளத்தில் வெளியாகவில்லை. ‘தலைவா வெயிட்டிங்’... என ரசிகா்கள் லைக்கா நிறுவனத்தை டேக் செய்து சுட்டுரையில் பதிவிட்டு வந்தனா். இதையடுத்து சிறிது நேரத்தில் படத்தின் டிரெய்லா் இணையத்தில் வெளியாகியுள்ளது. டிரெய்லருக்கு ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT