செய்திகள்

கேஜிஎஃப் ஹீரோ யஷ்ஷுக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு... அதென்ன தெரியுமா?

நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் யஷ்ஷுக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு. அதென்ன தெரியுமா? சூப்பர் ஸ்டார் திரைப்படங்களில் நடிக்க வரும் முன்பு கர்நாடக போக்குவரத்துத் துறையில் நடத்துனராகப் பணியாற்றியவர்.

சரோஜினி

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழித்திரைப்படமாக சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆஃபீஸில் அதகளம் செய்து வரும் கேஜிஎஃப் (கோலார் தங்க வயல் (Kolar Gold FIELDS) திரைப்படம் இதுவரை குவித்துள்ள தொகை அபாரம். சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கே ஜி எஃப் 1 திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆஃபீஸில் 152 கோடியையும் தாண்டி வசூலை அள்ளி வருகிறது. அதுமட்டுமல்ல திரைப்படம் வெளிவந்து 1 வாரம் கடந்த நிலையிலும் படத்துக்கான வரவேற்பு இன்னும் ஓயவில்லை. இப்போதும் தியேட்டர்களில் ஃபுல் லோடாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் அத்திரைப்படத்தின் நாயகன் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. 

கே ஜி எஃப் படத்தின் வெற்றி பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜீரோ திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி முன்னேறிக் கொண்டிருப்பதை வைத்து யஷ், ஷாரூக்கை பின்னுக்குத் தள்ளி விட்டாரா? என்றொரு கேள்வி செய்தியாளர்களால் யஷ்ஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரளித்த பதில்;

இல்லை... ஷாரூக் பல்லாண்டுகளாக நடித்துக் கொண்டிருப்பவர். அவருடைய அனுபவத்திற்கு முன் நான் ஒன்றும் இல்லை. இன்றைக்கு கேஜிஎஃப் வெற்றிகரமாக ஓடுகிறதென்றால் காரணம் கதை மக்களுக்குப் பிடித்திருக்கிறது. இப்படியான கதைகள் வந்தால் மக்கள் நிச்சயம் பார்ப்பார்கள் என்றே நான் உணர்கிறேனே தவிர இந்த வெற்றியை என்னுடையது மட்டுமே என்று என்னால் உரிமை கொண்டாட முடியாது. ஏனெனில் இதில் பலரது கூட்டு முயற்சி இருக்கிறது. அவ்வளவு தான் என்கிறார்.

கன்னடத்தில் பிரபல ஆக்‌ஷன் ஹீரோவாகக் கலக்கி வரும் யஷ்ஷுக்கு தமிழில் இது மிகச்சிறந்த துவக்கமாக அமைந்திருக்கிறது. இதற்கான நன்றியை யஷ், நடிகர் விஷாலுடன் பகிர்ந்து கொள்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலமாகத்தான் கேஜிஎஃப் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது என்பது இவ்விடத்தில் முக்கியமான செய்தி.

கன்னட நடிகரான யஷ், கேஜிஎஃப் க்கு முன்பு மிஸ்டர் & மிஸஸ் ராமாச்சாரி, கஜகேசரி, மொக்கின மனசு உள்ளிட்ட 19 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவற்றில் ஒன்றிரண்டு திரைப்படங்களில் கேமியோ கதாபாத்திரங்களாக அமைந்திருந்தாலும் மொக்கின மனசுக்குப் பிறகு யஷ் கவனிக்கத்தக்க இளம் ஹீரோக்களில் ஒருவராகி விட்டார் என்கிறது சாண்டல்வுட் வட்டாரம். இதில் மேலும் சுவாரஸ்யம் என்னவெனில் யஷ், மிஸ்டர் & மிஸஸ் ராமாச்சாரி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கையில் உடன் நடித்த நாயகி ராதிகா பண்டிட் என்பவருடன் காதலில் இருக்கிறார் என்று சில ஆண்டுகள் கிசுகிசு எழுதப்பட்டு வந்தது. இருவரும் அதை மறுத்தார்களோ இல்லையோ நான்காண்டுகளுக்குள் திருமணமே செய்து கொண்டார்கள். இப்போது இந்த நட்சத்திரத் தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உண்டு.

யஷ் என்பது திரைப்பெயர் மட்டுமே. இவரது இயற்பெயர் நவீன்குமார் கெளடா என்கிறது விக்கிபீடியா.

நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் யஷ்ஷுக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு. அதென்ன தெரியுமா? சூப்பர் ஸ்டார் திரைப்படங்களில் நடிக்க வரும் முன்பு கர்நாடக போக்குவரத்துத் துறையில் நடத்துனராகப் பணியாற்றியவர். அதே போல யஷ்... இல்லையில்லை... யஷ்ஷின் அப்பா அருண்குமார் கர்நாடக போக்குவரத்து துறையில் ஓட்டுனராகப் பணியாற்றியவர். யஷ் பிரபல ஹீரோவான பின்னும் தனது வேலையை விடாமல் கர்நாடகப் பேருந்துகளில் ஓட்டுநராக நீடித்திருந்தவர். அந்த வகையில் தன் தந்தை குறித்து தனக்கு மிகுந்த பெருமை உண்டு என்கிறார் யஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT