செய்திகள்

முக்கிய முடிவுகளை எடுக்க வரும் 20-ஆம் தேதி கூடுகிறது நடிகர் சங்க செயற்குழு

நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டடப் பணிகள் உட்பட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, வரும் 20-ஆம் தேதி நடிகர் சங்க செயற்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

சென்னை: நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டடப் பணிகள் உட்பட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, வரும் 20-ஆம் தேதி நடிகர் சங்க செயற்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு 'பஞ்ச பாண்டவர்கள்' என்று அழைக்கப்பட்ட விஷால் அணியினர் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் 3 வருட பதவி காலம் கடந்த அக்டோபர் மாதமே முடிந்தது. ஆனால் முன்னரே துவங்கப்பட்ட நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. 

அதேசமயம் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் கடந்த 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி தள்ளிவைத்து விட்டனர்.

இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டடப் பணிகள் உட்பட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, வரும் 20-ஆம் தேதி நடிகர் சங்க செயற்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் தீவிரமாக நடக்கின்றன. ஓரிரு மாதங்களில் கட்டுமான வேலைகள் முடிந்துவிடும் என்றும் மே அல்லது ஜூன் மாதம் திறப்பு விழா நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே செயற்குழுவில் கட்டிட பணிகள், அதற்கான செலவுகள் மற்றும் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்... விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ்!

அல்ஜீரியா: ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி!

பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக

முதல்முறையாக Space Needle கோபுரத்தில்பறந்த இந்திய தேசியக் கொடி! | US

பேசும் கருத்தில் எனக்கு முரண்பாடு! உன் தமிழில் எனக்கு உடன்பாடு” இல. கணேசன் குறித்து சீமான்!

SCROLL FOR NEXT