செய்திகள்

ஷூட்டிங்கில் தவறாக அடித்த 'பல்டி': நடிகை ஹன்ஷிகா காயம் 

சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது தவறாக 'பல்டி' அடித்த நடிகை ஹன்ஷிகா காயம் அடைந்தார். 

DIN

சென்னை:  சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது தவறாக 'பல்டி' அடித்த நடிகை ஹன்ஷிகா காயம் அடைந்தார். 

நடிகை ஹன்சிகா மோட்வானியின் 50-ஆவது படம் "மஹா". அதேநேரம் இப்படம் இசையமைப்பாளர் ஜிப்ரானின் 25 -வது திரைப்படமாகவும் அமைந்துள்ளது. கதாநாயகியை மையப்படுத்திய கதை ஒன்றில் ஹன்சிகா  முதன்முறையாக  நடிக்கிறார். 

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி மதியழகன் தயாரிக்கும் இப்படத்தை, புதுமுக இயக்குனர் யூ ஆர் ஜமீல் இயக்குகிறார்.

இந்நிலையில் "மஹா" திரைப்பட சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது தவறாக 'பல்டி' அடித்த நடிகை ஹன்ஷிகா காயம் அடைந்தார். 
  
படத்தில் வரும் ஒரு சண்டைக்காட்சி திங்களன்று படமாக்கப்பட்டது. அப்போது ஹன்சிகா தரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில பல்டி அடிக்க வேண்டும். ஆனால் நேரம் தவறியதால் பல்டி தவறாக அமைந்து, ஹன்ஷிகாவுக்கு சிறிய காயம் ஏற்பட்து. முதல் உதவி செய்த பின்னர் அவர் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைகை அணையில் பேரிடா் மீட்புப் பணி ஒத்திகை

காலிறுதியில் சிந்து, துருவ்/தனிஷா

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

பைக் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT