செய்திகள்

கல்விக் கொள்கை பற்றி சூர்யா பேசியது மோடிக்குக் கேட்டுள்ளது: காப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு

புதிய கல்விக்கொள்கையைப் பற்றி சூர்யா பேசியபிறகு அவருடைய இன்னொரு முகத்தைப் பார்க்கிறேன்...

எழில்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள காப்பான் படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். ஆகஸ்ட் 30 அன்று வெளிவரவுள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நேற்று நடைபெற்ற பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினி, ஷங்கர், வைரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் காப்பான் பட பால்கள் வெளியிடப்பட்டன.

இந்த விழாவில் ரஜினி பேசியதாவது:

சில வருடங்களுக்கு முன்பு நானும் கே.வி. ஆனந்துடன் இணைந்து படம் செய்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் பிறகு அது சரியாக அமையவில்லை. கமலின் இந்தியன் 2 நிச்சயம் வெற்றி பெறும். மணி ரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் எப்படி வரும் என ஆவலாகக் காத்திருக்கிறேன். தர்பார் படம் நல்லபடியாக வந்துகொண்டிருக்கிறது. தமிழாற்றுப்படை புத்தகத்தைப் படித்த பிறகு வைரமுத்து மீதான மதிப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. புதிய கல்விக்கொள்கை பற்றி ரஜினி பேசினால் மோடிக்குக் கேட்டிருக்கும் என்றார்கள். ஆனால் சூர்யா பேசியது மோடிக்குக் கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். சூர்யா மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். மாணவர்கள் படுகிற கஷ்டத்தை நேரில் பார்ப்பவர் அவர். புதிய கல்விக்கொள்கையைப் பற்றி சூர்யா பேசியபிறகு அவருடைய இன்னொரு முகத்தைப் பார்க்கிறேன். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மானின் ஆகிய இருவரின் கலவையாக உள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். அவர் இசையில் வசீகரா பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT