முகப்பு
செய்திகள்

சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன்!

தனுஷ் நடிப்பில் அசுரன் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அதற்கடுத்ததாக இந்த நகைச்சுவைப் படத்தை இயக்கவுள்ளார்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:39 AM
பகிர்:

சூரி கதாநாயகனாக நடிப்பார் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒரு செய்திதான்.

ஆனால் அவர், பிரபல இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகமாவார் என்பது யாரும் எதிர்பாராத ஒரு செய்தி.

இந்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக இன்று வெளியாகியுள்ளது. 

விண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல படங்களை ஆர்எஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மூலமாக முதல்முறையாகக் கதாநாயகனாக நடிக்கிறார் சூரி. தனுஷ் நடிப்பில் அசுரன் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அதற்கடுத்ததாக இந்த நகைச்சுவைப் படத்தை இயக்கவுள்ளார். 

சூரி - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள நகைச்சுவைப் படத்தை இப்போதிருந்தே எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள்தானே!

முழு கட்டுரையைப் படிக்க →