முகப்பு
செய்திகள்

எங்கள் அணி உறுதியாக வெற்றிபெறும் என்றார் விஜயகாந்த்: சந்திப்புக்கு பின்னர் பாக்யராஜ் பேட்டி 

நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி உறுதியாக வெற்றி பெறும் என்று விஜயகாந்த் கூறியதாக  அவருடனான சந்திப்புக்கு பின்னர் நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On : 13 ஜூன், 2019 at 7:05 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:43 PM

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி உறுதியாக வெற்றி பெறும் என்று விஜயகாந்த் கூறியதாக  அவருடனான சந்திப்புக்கு பின்னர் நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் பாக்யராஜ் தலைமையலான் சுவாமி சங்கரதாஸ் அணியினர் வியாழனன்று நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சந்தித்தனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நடிகர்கள் பாக்யராஜ், உதயா, பிரஷாந்த், குட்டி பத்மினி மற்றும் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் சென்று சந்தித்தனர்.

அப்போது நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு  விஜயகாந்திடம்  அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி உறுதியாக வெற்றிபெறும் என்று விஜயகாந்த் கூறியதாக  அவருடனான சந்திப்புக்கு பின்னர் நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ் கூறியதாவது:-

நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணிக்கு ஆதரவு தருவதாக விஜயகாந்த் கூறியுள்ளார். அத்துடன் எங்கள் அணி உறுதியாகி வெற்றி பெறும் என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு விஜயகாந்த் தெரிவித்தார். நாடக நடிகர்கள் தேர்தலில் ஓட்டுக்கு பணம் பெறுவார்கள் என நான் கூறவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.