முகப்பு
செய்திகள்

எதிர்பார்ப்பைத் தூண்டும் சூப்பர் டீலக்ஸ் ‘லீலா’ கேரக்டர்!

பாகுபலி திரைப்படத்திற்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன் இப்படி ஒரு கேரக்டரில் நடிப்பாரா? என்றிருந்த தயக்கத்தை உதறி ரம்யா கிருஷ்ணன் தான் தற்போது சூப்பர் டீலக்ஸின் லீலா கேரக்டருக்கு உயிரூட்டியிருக்கிறார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:21 AM
பகிர்:

இயக்குனர் தியாகராஜன் குமார ராஜாவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’  திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடிப்பதைப் போன்ற போஸ்டர்களால் அந்த திரைப்படத்துக்கான வரவேற்பு முன்பே எகிறிக் கிடந்தது. தற்போது சமீபத்தில் அப்படத்தில் டீஸர் வெளியானதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றிருக்கும் ஏராள நட்சத்திரங்களுக்காக மேலும் அதற்கான வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அத்துடன் இயக்குனர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள தனது நேர்காணலில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் லீலா எனும் பெண் கேரக்டர் குறித்துப் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவல் படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது. 

லீலா கேரக்டருக்காக இயக்குனர் தேர்வு செய்து வைத்திருந்த லிஸ்ட்டில் நடிகை ரம்யா கிருஷ்ணனும், நதியாவும் இருந்திருக்கிறார்கள். நதியா இயக்குனரின் கடைசி சாய்ஸ். ஒருவேளை ரம்யா கிருஷ்ணன் அந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொள்ளாவிட்டால் நதியாவிடம் கேட்டுப்பார்க்கலாம் என்று நினைத்ததாகக் கூறும் இயக்குனர் படத்திற்கான வேலை தொடங்கியதும் முதலில் கமிட் செய்திருந்த ரம்யா கிருஷ்ணனை விட்டு விட்டு  நதியாவை வைத்துத் தான் அக்காட்சிகளைப் படமாக்க முயன்றிருக்கிறார். ஆனால், பின்னர் இயக்குனர் தரப்பில் ஏதோ தடங்கல் ஏற்பட நதியாவை வைத்து எடுக்கப்பட்டிருக்க வேண்டிய லீலா கேரக்டர் கைவிடப்பட்டிருக்கிறது. பின்னர் நதியாவுக்குப் பதிலாக மீண்டும் ரம்யா கிருஷ்ணனையே அணுகியிருக்கிறார்கள்.

பாகுபலி திரைப்படத்திற்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன் இப்படி ஒரு கேரக்டரில் நடிப்பாரா? என்றிருந்த தயக்கத்தை உதறி ரம்யா கிருஷ்ணன் தான் தற்போது சூப்பர் டீலக்ஸின் லீலா கேரக்டருக்கு உயிரூட்டியிருக்கிறார். அந்த லீலா கேரக்டரில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று படம் வெளிவந்தால் தெரியும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments