செய்திகள்

சாய்னா நெவால் படம்: புதிய கதாநாயகி தேர்வு!

இந்த வருடத்தில் படப்பிடிப்பு முடிந்து, 2020-ம் வருட ஆரம்பத்தில் இப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது....

எழில்

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலின் வாழ்க்கை திரைப்படமாகவுள்ளது. இதன் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் நடிப்பில் அமோல் குப்தே இயக்கும் இப்படத்தை பூஷன் குமார் தயாரிக்கிறார். கடந்த செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் அமோல் குப்தே 3 படங்களை இயக்கியுள்ளார்.

பிரபல வீராங்கனையான 28 வயது சாய்னா நெவால் 20-க்கும் அதிகமான சர்வதேசப் போட்டிகளை வென்றுள்ளார். அதில் 10 சூப்பர் சீரிஸ் போட்டிகள். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். 

இந்நிலையில் இந்தப் படத்தில் சாய்னா நெவால் வேடத்தில் ஷ்ரதா கபூருக்குப் பதிலாக மற்றொரு பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கால்ஷீட் பிரச்னை காரணமாக ஷ்ரதா கபூர் இப்படத்திலிருந்து விலகியுள்ளார். 

இந்த வருடத்தில் படப்பிடிப்பு முடிந்து, 2020-ம் வருட ஆரம்பத்தில் இப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

334 கல்லூரி மாணவா்களுக்கு உயா்கல்வி உதவித்தொகை: ராஜேஸ்குமாா் எம்.பி. வழங்கினாா்

காணும் பொங்கல்: கிராமங்களில் விளையாட்டுப் போட்டி

பள்ளிபாளையத்தில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா

தினமணி முகவா் பீ.ஏ.சித்திக் காலமானாா்

வெளிநாடுகளுக்கு செல்லும் பூஜைப் பொருள்கள்...

SCROLL FOR NEXT