முகப்பு
செய்திகள்

மாநாடு படத்தில் சிம்புவின் ஜோடி - கல்யாணி பிரியதர்ஷன்! 

‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி, தமிழ்த் திரையுலகுக்கு...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் - மாநாடு. 

இந்தப் படத்தின் கதாநாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்யாணி பிரியர்தர்ஷன் சிம்புவின் ஜோடியாக நடிக்கவுள்ளார். இது இவர் நடிக்கும் 2-வது தமிழ்ப்படம்.

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதி 2014-ல் விவகாரத்து பெற்றார்கள். இவர்களுடைய மகள் கல்யாணி. இவர், ஹலோ என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகுக்கு அறிமுகமானார். பிறகு தற்போது இரு தெலுங்குப் படங்களிலும் ஒரு மலையாளப் படத்திலும் நடித்துவருகிறார். ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி, தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகவுள்ளார் கல்யாணி. இதையடுத்து சிம்பு படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →