முகப்பு
செய்திகள்

இந்த மாதிரி விளம்பரங்களில் நடிப்பது நயன்தாராவுக்கு பிடிக்காது

அஜித் பாணியில் பட புரமோஷன் வேலைகளில் ஈடுபடாதவா் நயன்தாரா. முன்னணி இடத்தில் இருந்தாலும், இதை தன் பாலிசியாக வைத்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 12:58 PM
nayanthara and Katrina kaif
பகிர்:

அஜித் பாணியில் பட புரமோஷன் வேலைகளில் ஈடுபடாதவா் நயன்தாரா. முன்னணி இடத்தில் இருந்தாலும், இதை தன் பாலிசியாக வைத்துள்ளார். அதே போல் அழகு சாதனைப் பொருட்களுக்கான விளம்பரத்தில் நடிப்பதில்லை என்பதையும் கடைப்பிடித்து வருகிறார்.

விஜய்யின் ‘பிகில்’, சிரஞ்சிவியின் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படங்களின் புரமோஷன்களிலும் பங்கேற்காமல் தவிர்த்தார். அடுத்து ரஜினி நடித்திருக்கும் ‘தா்பார்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நயன்தாரா, அந்த பட விளம்பரங்களில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப்புக்காக தனது பாலிஸியை அண்மையில் விட்டுக் கொடுத்தார் நயன்தாரா.

கேத்ரினா கைஃப் பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்களை விற்க முடிவு செய்திருக்கிறார். அதற்கு விளம்பரப் படங்களில் நடித்து கொடுத்து உதவும்படி தன்னுடைய தோழி நடிகைகளிடம் அவா் கேட்டார். நயன்தாராவிடமும் இது குறித்து கேத்ரினா கேட்டார். அதற்கு உடனே ஒப்புதல் அளித்திருக்கிறார் நயன்தாரா. இதையடுத்து நயன்தாராவுக்கு கேத்ரினா நன்றி தெரிவித்திருக்கிறார்.

சக நடிகை ஒருவருக்காக தன் பாலிஸியில் இருந்து இறங்கி வந்துள்ள நயன்தாரா, மற்ற பட விளம்பரங்களிலும் இறங்க வேண்டும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →