செய்திகள்

வெளியானது பிகில் எமோஜி.. டிவிட்டர் டிரெண்டிங்கில் தூள் கிளப்பும் விஜய் ரசிகர்கள்!

DIN


விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதை அடுத்து, டிவிட்டரில் பிகில் படத்துக்கான பிரத்யேக எமோஜி வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம், வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கப்பட்ட நிலையில், டிக்கெட்டுகளை புக் செய்து ரசிகர்கள் கொண்டாட்ட மழையில் நனையத் தொடங்கிவிட்டனர்.

இந்த கொண்டாட்ட மனநிலையை மேலும் அதிகரிக்கும் வண்ணமாக, பிகில் பட வெளியீட்டையொட்டி, டிவிட்டரில் பிகில் படத்துக்கென்று பிரத்யேக எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. ஹேஷ்டேக் இட்டு பிகில் என்று டைப் செய்தால் பிகில் எமோஜி உருவாகிவிடும்.

இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், நடிகர் விஜய், நடிகர் கதிர் உள்ளிட்டோர் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். விஜய் ரசிகர்களும் இதனைக் கொண்டு வெறித்தனம், பிகில்தீபாவளி, தளபதி63, போட்றாவெடிய என வரிசையாக ஹேஷ்டேக்குகளைப் போட்டு தேசிய அளவில் டிவிட்டர் டிரெண்டிங்கை ஆக்கிரமித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT