செய்திகள்

காப்பான் பட நிகழ்ச்சியில், கோட்சே குறித்த பெரியாரின் கருத்தைச் சுட்டிக் காட்டிப் பேசிய சூர்யா!

காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான் எனப் பெரியார் கூறினார்... 

எழில்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள காப்பான் படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். செப்டம்பர் 20 அன்று வெளிவரவுள்ளது.

இந்நிலையில் காப்பான் பட செய்தியாளர் சந்திப்பில் சூர்யா பேசியதாவது:

காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான் எனப் பெரியார் கூறினார். கோட்சே, காந்தியைச் சுட்டபிறகு வன்முறை வெடித்தது. கோட்சேவின் துப்பாக்கியை உடைக்கும்படி பெரியார் கூறினார். நாங்கள் கோட்சேவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் துப்பாக்கியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பலரும் அவரிடம் கேட்டுள்ளார்கள். கோட்சே வெறும் துப்பாக்கிதான் என்றார் பெரியார். ஒரு நிகழ்வின் பின்னால் ஒரு அமைப்பு, ஒரு சித்தாந்தம் உள்ளதை காந்தி கொலையின் மூலம் பெரியார் சாதாரணமாகச் சொல்லியிருந்தார். இதுமாதிரியான சூழலை காப்பான் படத்திலும் பார்க்கலாம் என்று பேசினார் சூர்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘எஸ்ஐஆர் பணி: நவ. 25 வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்’

உழவர் நல சேவை மையங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்: டிசம்பரில் தொடக்கம்

தென்காசி ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

கோவில்பட்டியில் தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண்கள் தா்னா

SCROLL FOR NEXT