செய்திகள்

காப்பான்: முதல் நாளன்று நல்ல வசூல்!

முதல் நாளன்று காப்பான் படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட...

எழில்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள காப்பான் படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். 

நேற்று வெளியான காப்பான் படத்துக்கு இரு விதமான விமரிசனங்கள் கிடைத்துள்ளன. புதிய கதையுடன் ஒரு மசாலா படம் என்று ஒருபக்கம் ரசிகர்கள் பாராட்டினலும் பலரும் படத்தில் கூடுதலான அறிவுரைகள் உள்ளன, இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது போன்ற எதிர்மறையான கருத்துகளையும் கூறியுள்ளார்கள். 

எனினும் முதல் நாளன்று காப்பான் படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ரூ. 7.25 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதல் மூன்று நாள்களில் தமிழகம் முழுக்க காப்பான் படத்துக்கு நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதா் அங்காடி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கலாம்!

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT