முகப்பு
செய்திகள்

21 வருடங்களுக்குப் பிறகு கமல் படத்தில் நடிக்கும் வடிவேலு! 

லைகா தயாரிப்பில் கமல் நடித்து இயக்கும் தலைவன் இருக்கின்றான் என்கிற படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது...

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:11 AM
பகிர்:

லைகா தயாரிப்பில் கமல் நடித்து இயக்கும் தலைவன் இருக்கின்றான் என்கிற படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

இந்தப் படத்தில் வடிவேலு நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் 21 வருடங்களுக்குப் பிறகு கமல் படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு வடிவேலுக்குக் கிடைத்துள்ளது. 

தேவர் மகன் (1992), சிங்காரவேலன் (1992), மகாராசன் (1993), காதலா காதலா (1998) என கமலுடன் இணைந்து நான்குப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் வடிவேலு. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிப்பதற்காக லைகா நிறுவனத்திடமிருந்து வாங்கிய சம்பளத்துக்குப் பதிலாக இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. 

தலைவன் இருக்கிறான் படக்குழு குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →