விஜய் மற்றும் அவருடைய மனைவி பற்றி சமூகவலைத்தளங்களில் தவறாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது விஜய் மக்கள் இயக்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள்.
கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழை அடைந்த மீரா மிதுன் - 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி என மூன்று படங்களில் நடித்துள்ளார்.
ட்விட்டரில் நடிகர் விஜய்யைப் பற்றி சமீபத்தில் அவர் கூறிய கருத்துகளுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து தவறாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது பட்டுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள். பட்டுக்கோட்டை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நகர ஒன்றியத் தலைவர் ஆதி. ராஜாராம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா பற்றி சமூகவலைத்தளங்களில் கொடிய வார்த்தைகளால் பேசி வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.