புதுப்பேட்டை, அன்பே சிவம் படங்களைத் தயாரித்த வி. சுவாமிநாதன் கரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 62.
கோகுலத்தில் சீதை, பிரியமுடன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து, பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களை 90கள் முதல் தயாரித்து வருகிறது லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் திரைப்பட நிறுவனம். இந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் வி. சுவாமிநாதன். சில படங்களில் குணச்சித்திரை வேடங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் சுவாமிநாதன் சமீபத்தில் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி இன்று காலமாகியுள்ளார்.
சுவாமிநாதனின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.