செய்திகள்

சுசாந்த் சிங் மரண வழக்கு: சிபிஐ விசாரிக்க பாலிவுட் பிரபலங்கள் கோரிக்கை

சுசாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாலிவுட் பிரபலஙகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

DIN

சுசாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாலிவுட் பிரபலஙகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தனது மகன் சுசாந்த் சிங்கைத் தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.15 கோடி மாயமான விவகாரத்தில் தொடா்பு இருப்பதாகக் கூறி, நடிகை ரியா சக்ரவா்த்தி, அவரது தாயாா் சந்தியா சக்ரவா்த்தி, தந்தை இந்திரஜித் சக்ரவா்த்தி, சகோதரா் ஷோயிக் உள்ளிட்ட சில நபா்கள் மீது சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங், பாட்னா போலீஸில் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக அந்த மாநில காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா். அந்த வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளார் ரியா. 

இந்நிலையில் சுசாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு அடுத்ததாக பாலிவுட் பிரபலங்களும் குரல் கொடுத்துள்ளார்கள். பிரபல நட்சத்திரங்கள் கங்கனா ரணாவத், வருண் தவான், பரிநீத்தி சோப்ரா, சித்தார்த் சதுர்வேதி, ஸரீன் கான் போன்றோர் சுசாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள். 

சுசாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங், சுசாந்த் சிங் தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று இன்ஸ்டகிராமில் கூறியுள்ளார். ஒரு தேசமாக அனைவரும் ஒன்று கூடி சிபிஐ விசாரணையைக் கோருகிறோம். நடுநிலையான விசாரணை வேண்டும் எனக் கேட்பது நமது உரிமை. உண்மை வெளியே வரவேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேகம்

பாரிஸ் 2025... ஐஸ்வர்யா அர்ஜுன்!

விழாச் சிலை... தான்டா காவ்ரி!

51-ஆவது முறை! இந்தியா - பாக். சண்டை நிறுத்தம் குறித்து பேசிய டிரம்ப்: பிரதமர் மோடி மௌனம்! -காங்.

200% வரி விதிப்பேன்: போரை நிறுத்த வரியால் அச்சுறுத்தும் டிரம்ப்!

SCROLL FOR NEXT