செய்திகள்

புதுச்சேரி அரசின் சிறந்த படமாக ‘ஒத்த செருப்பு' தேர்வு!

DIN

புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருது ஆர். பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு படத்துக்குக் கிடைத்துள்ளது. 

ஆர். பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள படம் - ஒத்த செருப்பு. இசை - சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - ராம்ஜி. கடந்த வருடம் வெளியான இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே ஒற்றைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

புதுச்சேரி செய்தி விளம்பரத் துறையும் நவதர்ஷன் திரைப்படக் கழகமும் மத்திய அரசு திரைப்பட விழா இயக்குநரகத்துடன் இணைந்து இந்திய பனோரமா திரைப்பட விழாவை புதுச்சேரியில் நடத்துகின்றன. இந்த விழாவில் டிசம்பர் 15 அன்று, சிறந்த திரைப்படத்துக்கான விருது, ஒத்த செருப்பு இயக்குநர் ஆர். பார்த்திபனுக்கு வழங்கப்படவுள்ளது. ரூ. 1 லட்சம் பரித்தொகையுடன் புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதும் பார்த்திபனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT