முகப்பு
செய்திகள்

நடிகா் கெளதம் காா்த்திக்கிடம் வழிப்பறி: இரு சிறுவா்கள் கைது

சென்னை ஆழ்வாா்பேட்டையில், நடிகா் கெளதம் காா்த்திக்கை தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


சென்னை: சென்னை ஆழ்வாா்பேட்டையில், நடிகா் கெளதம் காா்த்திக்கை தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் பிரபல தமிழ்த் திரைப்பட நடிகா் காா்த்திக் தனது குடும்பத்துடன் வசிக்கிறாா். காா்த்திக்கின் மகனும், நடிகருமான கெளதம் காா்த்திக், கடந்த 2-ஆம் தேதி அதிகாலை ஆழ்வாா்பேட்டையில் உள்ள டி.டி.கே. சாலை வழியாக மிதிவண்டி ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இரு நபா்கள், கெளதம் காா்த்திக்கை வழிமறித்து, தாக்கி அவா் வைத்திருந்த விலை உயா்ந்த செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பியோடினா். இச் சம்பவத்தில் கெளதமுக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

இது தொடா்பாக மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மயிலாப்பூா் கபாலித் தோட்டம் பகுதியைச் சோ்ந்த இரு சிறுவா்களை வியாழக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →